×

மீஞ்சூர் – காட்டூர் சாலை மேம்பால பணிக்காக வீடுகள் கடைகள் அகற்ற எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வாக்குவாதம்: எம்எல்ஏ சமரசம்

பொன்னேரி: மீஞ்சூர்- காட்டூர் சாலை மேம்பால பணிக்காக வீடுகள் மற்றும் கடைகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர்-காட்டூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒன்றிய, மாநில அரசின் அனுமதி பெற்று நெடுஞ்சாலை துறை, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. இதில், மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் பாதி வேலை முடிந்தது. இந்நிலையில், இரு புறமும் சாலை இணைப்பு பணி இழுபறியில் மீஞ்சூர் -காட்டூர் சாலை அரியன் வாயில் பகுதியில் உள்ள இருபுறங்களிலும் 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 17 வீடுகளையும் அப்புறப்படுத்த கோரி கடந்த ஜூன் மாதம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்படாததால், மேம்பால பணிக்காக நிலம் கையகப்படுத்த நேற்று கொக்லைன் இயந்திரத்துடன் உதவி பொறியாளர் ஜெயமூர்த்தி தலைமையில் அகற்ற வந்தனர். அப்போது, அப்பகுதி வியாபாரிகள் அதிகாரிகளிடம் கால அவகாசம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு துரை சந்திரசேகர் எம்எல்ஏ விரைந்து வந்தார். அவரிடம் வியாபாரிகள் கால அவகாசம் தரக்கோரி தெரிவித்தனர். இது குறித்து வரும் 5ம் தேதிக்குள் தாங்களே கட்டிடங்களை காலி செய்து கொடுப்பதாக தெரிவித்ததின் பேரில் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post மீஞ்சூர் – காட்டூர் சாலை மேம்பால பணிக்காக வீடுகள் கடைகள் அகற்ற எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வாக்குவாதம்: எம்எல்ஏ சமரசம் appeared first on Dinakaran.

Tags : Meenjur ,Kattur ,MLA ,Ponneri ,Meenjur-Kattur ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பேரூராட்சியில் குளம்...